பூந்தமல்லி ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் கோயிலின் 54-ம் ஆண்டு ஆடித் திரு விழா

பூந்தமல்லியில் ஆஞ்சநேயர் கோயில் தெருவில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் 54-ம் ஆண்டு ஆடித் திரு விழா மற்றும் 4 வது வாரம் ஆடித்திருவிழாவை முன்னிட்டு 19-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி ஆன்மீக வள்ளல் மு.எம்.எல்.ஏ. அருள்அன்பரசு ஏற்பாட்டில் நடைபெற்றது‌. பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் உள்ள பனையாத்தம்மன் கோயிலில் இருந்து ஆயிரம் பெண் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்தது.

இதில் அருள் மீனாட்சி உள்பட 1500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை, பூஜைகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து மேள தாளத்துடன் வானவேடிக்கையுடன் பக்தர்கள் அம்மன், பிள்ளையார், சிவன் வேடம் அணிந்து கையில் வேல் மற்றும் சூலம் ஏந்தி பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி கோயிலில் வந்து அம்மனை வழிபட்டனர்.இதில் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த கோயிலின் ஆடிதிருவிழா கமிட்டியாளர்களான விழாக் குழு தலைவர் எல்.ராதாகிருஷ்ணன்,விழா செயலாளர்கள் ப.சேகர்,பி.பழனி, ஆர்.எம்.சேகர், விழா துணை தலைவர் பி.மாதவன்,விழா பொருளாளர் எஸ். சீதாராமன் மற்றும் ஜி.ஆர்.திருமலை, தொழிலதிபர் சுரேஷ்,கவிதா சுரேஷ்,அசோக் குமார்,தங்கம் திருமலை,ஜெயக்குமார்,நடிகர் தரணிதரன், செல்வராஜ்,முகுந்தன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment