Take a fresh look at your lifestyle.

நயன்தாரா பதிவுக்கு நஸ்ரியா லைக்!

51

நடிகர் தனுஷ் மீது குற்றம்சாட்டி நயன்தாரா பகிர்ந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து லைக் செய்த நடிகைகள்.

நெட்ஃபிளிக்ஸ் வெளியிட இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான அவரது பதிவுக்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தனுஷுடன் நடித்த நடிகைகள் பலர் தான் அதற்கு லைக் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுக்கு எதிராக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கவுரி கிஷன், காயத்ரி ஷங்கர், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர். இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மேற்கண்ட நடிகைகளில் ‘3’ படத்தில் தனுஷுடன் ஸ்ருதி ஹாசனும், ‘மரியான்’ படத்தில் தனுஷுடன் பார்வதியும், ‘கொடி’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருந்தது கவனிக்கத்தக்கது.
மேலும் ‘நய்யாண்டி’ படத்தில் தனுஷுடன் இணைந்து நஸ்ரியாவும், ‘வடசென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூம் நடித்திருந்தனர். தனுஷுடன் நடித்த நடிகைகளும் இதற்கு லைக் செய்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் 3 நிமிட முன்னோட்ட வீடியோவில் ‘நானும் ரௌவுடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.