Take a fresh look at your lifestyle.

எடப்பாடி பழனிச்சாமியை துவைத்தெடுத்த முதலமைச்சர்!

51

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே ஜெயங்கொண்டம் வந்த ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இதையடுத்து இன்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே அமைப்பட்டப்பட்ட கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கரன், கோவி.செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரியலூரில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கும் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து 130 ஏக்கரில், ரூ.1,000 கோடி மதிப்பில் ஜெயங்கொண்டம் சிப்காட்டில் புதிய காலணி தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதேபோல் கொல்லாபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சித் திட்டங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தபின் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்றார்.

இதில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் ஸ்டாலினை ராஜேந்திர சோழன் என புகழ்ந்தார்.

இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், “கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம். நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை இடைவிடாமல் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி தந்ததால் தான் நான் உங்கள் முன்பு கம்பீரமாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற நினைப்பதால் தான் உங்களைப் பார்க்க நான் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன்” என்று மக்களைப் பார்த்து பரவசத்தோடு கூறியிருக்கிறார். 

இதுதவிர, விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இயங்கி வருகிறது. எதிர்கால தமிழ்நாடு வளமான தமிழ்நாடாக இருக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என ஊழல் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி” என்று எதிர் கட்சித் தலைவரை குறிப்பிட்டு காட்டமாகப்  பேசினார்.

வரலாற்றில் அழிக்க முடியாத ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கும். மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என நினைத்து நாள்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. பொய்க்கு மேக் அப் போட்டால் அது உண்மையாகாது. அது பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.

திமுக அரசுக்கு எதிராக பொய் மூட்டைகளை இபிஎஸ் அவிழ்த்து விடுகிறார். மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவைக் கண்டு இபிஎஸ்க்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிப்படையாக தாக்கி பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.