தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதாரப்பூர்வமாக ஆளும், ஆண்ட கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும் ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் திட்டம். வழக்கறிஞர் அணியின் உதவியோடு திமுக, அதிமுகவை குறிவைத்து ஊழல் பட்டியலை தயார் செய்து வருவதாக தகவல்.