ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கல்லூரியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆடிசன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ மாணவிகளும், பள்ளி மாணவ மாணவிகளும், 50 வயதிற்குள்ளும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். முதல் கட்ட தேர்வு நடந்த பின்னர் இதே வளாகத்தில் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கோயம்புத்தூரில் நடைபெறுகின்ற ஆடி தெரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.