Take a fresh look at your lifestyle.

நான் எப்பவும் சென்னைக்கார பையன் தான் – புஷ்பா 2 விழா மேடையில் அல்லு அர்ஜூன் பேச்சு!

58

‘புஷ்பா 2’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படக்குழு நேற்று சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலீலா, இயக்குநர் நெல்சன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை தாம்பரத்தில் நடந்த ‘புஷ்பா 2’  தி ரூல் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் மேடைக்கு வந்தவுடன் அரங்கமே அதிர்ந்தது.

“நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்பான வணக்கம். என் தமிழ் மக்களே வணக்கம். என் சென்னை மக்களே வணக்கம் (நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்பின் வணக்கம். தமிழனுக்கும் சென்னைவாசிகளுக்கும் வணக்கம்) இந்த நாளுக்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். புஷ்பாவின் விளம்பரத்திற்காக நான் உலகம் முழுவதும் பயணம் செய்த ஒரு மறக்கமுடியாத நாள், ஆனால் நான் சென்னைக்கு வரும்போது ஏற்படும் உணர்வு இணையற்றது” என்று அல்லு அர்ஜுன் தனது உரையைத் தொடங்கினார். சென்னை தாம்பரத்தில் நடந்த புஷ்பா 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தெலுங்கில் பேச சொல்லிய ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் சொன்ன பதில், “நான் தமிழ்லதான் இன்னைக்கு பேசுவேன். இந்த மண்ணுக்கு நான் கொடுக்கிற மரியாதை அது. நான் நான்கு வருஷமாக ஒரே பெண்ணை பார்க்கிறேன். அந்த பெண் ராஷ்மிகாதான். என்னுடைய பெஸ்ட் கொடுக்க செய்ததற்கு நன்றி ராஷ்மிகா. ஶ்ரீ லீலா ஒரு பாடலுக்கு வர்றேன்னு சொன்னதும் நான் கொஞ்சம் தயாராகினேன். அந்த அளவுக்கு கடினமாக உழைக்கக்கூடியவர் ஶ்ரீ லீலா. நான் ஆரம்பத்துல ஒரு படம் பண்ணீட்டு ஒரு வருஷம் வீட்டுல இருந்தேன். அப்போ சுகுமார் எனக்கு ̀ஆர்யா’ படம் கொடுத்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்கள் பண்ணீட்டு இருக்கேன். என்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த நபர்களில் முக்கியமானவராக நான் அவரைதான் குறிப்பிடுவேன். இப்போகூட படம் தரமாக வரணும்னு ரொம்ப வேலை பார்த்துட்டு இருக்கார். அதுனாலதான் இங்க வரல” என்று ரசிக்கும் வகையில் பேசினார்.

சின்ன வயசுல ரஜினி சார் படத்துக்கு அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கிப் பார்ப்பேன்.” என அல்லு அர்ஜுன் தன்னை ஒரு ரஜினி ரசிகர் என்று அறிவித்துக்கொண்டார்.

“இந்த இடம் எனக்கு நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நினைவூட்டுகிறது. நான் நிறைய பேசப் போகிறேன். உளவியல் ரீதியாக, அவரது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளில் ஒரு நபர் வாழ்ந்த வாழ்க்கை அவரது மீதமுள்ள வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. என்னுடைய இருபது வருடங்கள், நான் இன்று என்னவாக இருந்தாலும், நான் எங்கு சென்றாலும் ‘சாதா சென்னை பையனாக’ இருப்பேன்” என சொல்லி முடிக்கும்போதே மக்களின் கரகோஷம் ஆர்ப்பரித்தது.

சென்னையில் பிறந்த அல்லு அர்ஜுன், தனது பள்ளி, கல்லூரிப் படிப்புகள் அனைத்தையும் நகரத்திலேயே கழித்தார், அந்த இடமும் அதன் மொழியும் அவருக்கு புதிதல்ல. இருப்பினும், சென்னையில் நடக்கும் முதல் மெகா நிகழ்வு இதுவாகும், மேலும் இந்த தருணத்திற்காக தான் பல ஆண்டுகளாக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.