Take a fresh look at your lifestyle.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கூட்டம்!

8

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் கொங்கு மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் நிர்வாகிகள் கூட்டம் பவிஷ் பார்க் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வேளாளர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர், ஈரோடு 1ம் மண்டல தலைவர் சின்னச்சாமி, டிப்பர் பழனிச்சாமி, குமலன்குட்டை பகுதி தேவராஜ், ஈரோடு வட்டார தலைவர் ஜெகதீஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுசி உட்பட 300 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நோக்கமாக, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டுமா? அல்லது கூட்டணி வைக்க வேண்டுமா? என்று இருந்தது.
பெரும்பாலான நிர்வாகிகள் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறினார்கள்.