Take a fresh look at your lifestyle.

சென்னை எழும்பூரில் ஜெய் பீம் அகில இந்திய நல சங்கத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம்!

3

ஜெய் பீம் அகில இந்திய, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக இரண்டாவது அகில இந்திய செயற்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள இக்க்ஷா மையத்தில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் பிரதிநிதிகள் அகில இந்திய அளவில் கலந்து கொண்டனர். இந்த அகில இந்திய செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய முனைவர் எஸ் ரவிவர்மன் இயக்குனர் பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.புத்தர் மற்றும் பாபா சாகேப் பற்றிய அவருடைய அருமையான ஆழமான கருத்துக்கள் தேசிய அளவில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை கவர்ந்து இழுத்தது. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஜெய் பீம் நலச்சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அருள்மணி அரசு அவர்கள் செயற்குழு கூட்டத்தை தலைமையேற்று சிறப்பாக நடத்தினார். பொதுச் செயலாளர் அருள்மணி அரசு பேசும்போது இந்த அகில இந்திய நலச் சங்கத்தை எப்படி வழி நடத்த வேண்டும் சங்கத்தை எப்படி பலப்படுத்த வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தினார். பொதுச் செயலாளர் அருள்மணி அரசு அவர்கள் உடல் நலத்தையும் மன பலத்தையும் உறுதியாக்கும் உத்திகளை கூட்டத்தில் தெளிவு படுத்தினார். இந்த செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் வழிகாட்டி விஜயன், ஆலோசகர் பாலகிருஷ்ண ரெட்டி பொருளாளர் மூர்த்தி, இணை பொது செயலாளர் பாலாஜி, மூத்த துணைத்தலைவர் மகேஷ் பாபு, கூடுதல் மூத்த துணை தலைவர் பில்லி ஸ்ரீனி, மூத்த துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த செயற் குழு கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர்கள் சுமித் குமார் சாகா, சேதுராமன், பார்த்தா, ரவிக்குமார், மண்டல துணைத் தலைவர்கள் ராஜேஷ், காந்தி, சபாவத் ரமேஷ் நாயக் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர்கள் மனசி புர் கைட், செந்தில்குமார், பிஜயகுமார் சிங், ராபின் தலுக்தார், வாதித்ய சுதர்சன், சென்னை மண்டல உதவி பொதுச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு துணை பொது செயலாளர்கள் ராஜன் மற்றும் அகில இந்திய அளவில் பல்வேறு செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், திருவள்ளுவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் சந்திரசேகர், டிஎஸ்பி (ஓய்வு) சேகர், சிறுபான்மை குழு உறுப்பினர் ஏசி குமார், மூத்த வழக்கறிஞர் பிச்சை முத்து, சமூக சேவகர் தேவராஜ், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணை பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், ஓய்வு பெற்ற முதன்மை மேலாளர் வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமூக நீதித்துறை உறுப்பினர் இளங்கோ, சமூக சேவகர்கள் சுந்தர பாண்டியன் மற்றும் ரவி கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக ஜெய் பீம் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் அருள்மணி அரசு செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை இனிதே முடித்து வைத்தார்.