Take a fresh look at your lifestyle.

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!

8

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான ‘தி பாரடைஸ்’- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான ‘ஆயா ஷேர்’ … என  இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். ‘நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது’ என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசர் – அடக்குமுறை மற்றும் வன்முறையால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு கொடூரமான உலகில் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது. இந்த இருளுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களின் உரத்த குரலாகவும்…. சக்தி வாய்ந்தவர்களுக்கு கெட்ட கனவாகவும் மாறும் ஒரு அச்சமற்ற புரட்சியாளரான ஜடல் எழுகிறார். ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி- கோபம் மற்றும் நோக்கத்தால் நிரம்பி இருப்பதால்… இந்த மோதல் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தோன்றுகிறது.

இந்த டீசரை தனித்துவமாக காட்சிப்படுத்துவது… அதன் காட்சி ரீதியிலான கதை சொல்லல்தான். மீண்டும் மீண்டும் இடம்பெறும் காகத்தின் உருவம்…. பல தலைமுறைகளாக ஓரங்கட்டப்பட்டவர்களை குறிக்கிறது. இந்த குறியீடு – படத்தின் அதிரடி நிறைந்த கதைக்கு கச்சிதமாக பொருந்துவதுடன்.. உணர்வு பூர்வமான ஆழத்துடனும் இணைக்கிறது.

சண்டைக் காட்சிகள்-  பிரமிக்க வைக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமான கோடாரி மோதல் …ஒரு அதி திவீரமான சிறை சண்டை …. கொடூரமான வாள் சண்டை …. எலும்பும் முறியும் அளவுக்கு கைகலப்பு… கொழுந்து விட்டு எரியும் வெடிப்புகள்…. ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சியில் ஒன்றாக அணிவகுத்து செல்வது…. என ஒவ்வொரு காட்சியும் இயல்பாகவும், தயக்கமின்றியும் பிரம்மாண்டமாக உணரப்படுகிறது. இந்த டீசர் ஒருபோதும் தனது வேகத்தை இழக்காமல் ..மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்களை தொடர்ந்து வழங்குகிறது.