Take a fresh look at your lifestyle.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்!

8

கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழை பெய்து கீழ் பவானி அணைக்கு நீர் வந்தும் கூட கீழ்பவானி பாசன பூமிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தண்ணீர் திறந்து விட இதுவரையில் மறுத்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக பாசனத்திற்கு தண்ணீர் விடச் சொல்லி போராடிய நிலையிலும் செவிசாய்க்கவில்லை. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதற்காக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பவானி பாசன சங்கத் தலைவரும், கல் இறக்குவோர் சங்கத் தலைவர்மான நல்லசாமி, பிஜேபி மகளிர் அணியைச் சேர்ந்த சென்னிமலை கலைவாணி, கீழ்பவானி பாதுகாப்பு சங்கம் ரவி, மாநில கல் இறக்குவோர் சங்கத்தின் உடைய உறுப்பினர் கதிரேசன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சா சங்கத்தினுடைய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கீழ்பவானி தமிழக விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள் செல்வகுமார், தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்க இணைப்பு தலைவர் ஈ வி கே சண்முகம், நடராஜன், துளசி மணி போன்ற ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.