மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து ‘மகாயுதி’ என்ற பெயரிலும் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸூம் கூட்டணி அமைத்து ‘மகாவிகாஸ் அகாடி’ என்ற பெயரிலும் போட்டியிட்டுக் கொண்டன. இந்த இரண்டு மெகா கட்சிகளையும் தவிர நான்கு சிறிய கட்சிகளும் களத்தில் இறங்கின.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருந்த நிலையில் அங்கு நடந்த மாநில தேர்தலில் கடும் போட்டி நிலவின. கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகள் நவம்பர் 20ஆம் தேதி பதிவாகின.
அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகள் இருந்த நிலையில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டு நிலவியது.
இதையடுத்து இரண்டு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதைத் தவிர இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளும் இன்று நடந்து வருகின்றது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாநில போலீசாருடன் துணை ராணுவமும் எந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை அங்கு ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில் பெரும்பான்மையை தாண்டி அங்கு JMM, காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் முன்னிலையில் வெற்றி பெற்று உள்ளது மற்றும் பாஜக கூட்டணி 29 இடங்கள் பெற்று உள்ளது.
அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் 288க்கு 220 தொகுதிகளை பிடித்து பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 59 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 9 தொகுதிகளையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.