மத்திய அமைச்சர் பதவி முக்கியமில்லை: தர்மேந்திர பிரதான்

புவனேஸ்வர்: மத்திய அமைச்சர் பதவி தனக்கு முக்கியமில்லை; இளம் தலை முறையினர் நமது குழந்தைகள் என மத்திய கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: இளம் தலைமுறையினர் நமது குழந்தைகள். சிலர் அவர்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதே என்னை பதவி விலக நிர்பந்தித்தது. இளம் தலைமுறையினருடன் எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்னைகளும் இல்லை.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு கோடி குழந்தைகள் பிறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு லட்சியங்கள் உள்ளன, அவர்கள் இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றுவார்கள். அந்தப் பதவி எனக்கு முக்கியமாக இருக்கவில்லை. பிரதமர் மோடியை அணுகி, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக தெரிவித்தேன். இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.

திரும்பி வருவேன்
சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ரைராகோல் என்ற இடத்தில் நடந்த மற்றொரு கூட்டத்தில், தனக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் கடுமையாகச் சாடினார். அவர், ”நான் ஒரு விவசாயி மகன். நீங்கள் என்னைத் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் திரும்பி வருவேன்,” என்று கூறினார்.

Comments (0)
Add Comment