இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 190 கோடியே நாற்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் நான்கு அலுவலக கட்டடங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி வாயிலாக இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் ரூ. 18.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஔவையார் மணிமண்டபம் கட்டும் பணி.
ரூ. 11.03 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை வானாபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் திருப்பூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் புதியதாக திருமண மண்டபம் கட்டும் பணி. ரூ. 9 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் புதியதாக இணை ஆணையர் அலுவலகங்கள்.
நாகர்கோவில் மற்றும் கிருஷ்ணகிரியில் புதியதாக உதவி ஆணையர் அலுவலகங்கள். மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி. அருணாச்சலேசுவரர் மற்றும் சமயபுரம் திருக்கோயிலில் கோபுரங்கள் மற்றும் விமானங்களை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிக்கு ரூ. 7 கோடி.
கோவை அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயில், செங்கல்பட்டு அருள்மிகு வரதராஜ பெருமாள், கொல்லிமலை அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில்களில் ரூ.6.81 கோடி மதிப்பீட்டில் புதிய ராஜகோபுரங்கள் கட்டும் பணி. ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் திருப்பதி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கான தங்குவதற்காக, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தங்கும் விடுதி.
அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி.
ரூ. 11.96 கோடி மதிப்பீட்டில் நான்கு திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபங்கள்.
ரூ. 9.42 கோடி மதிப்பீட்டில் 7 திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்கள்.
ரூ. 7.83 கோடி மதிப்பீட்டில் சேலம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த இணை ஆணையர் அலுவலகங்கள்.
ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள அமாவாசை மண்டபம் மற்றும் குங்குமக் கூடம்.
ரூ. 4.39 கோடி மதிப்பீட்டில் மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சீரமைக்கப்பட்ட மலைப்பாதை, புதியதாக கட்டப்பட்டுள்ள யாகசாலை மற்றும் திருக்கோயில் நுழைவாயில் வளைவு.
தாந்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலில் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம்.
ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள படித்துறை, 1000 லிட்டர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், குழந்தைகளுக்கு பாலூட்டும் வரை மற்றும் சேவார்த்திகள் தங்கும் விடுதி.
இவற்றை திறந்து வைத்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலினுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.