தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவிய நாதக கட்சியினர்!

நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். நாகை மாவட்டதின் வடக்கு பொய்கைநல்லூர், தெற்கு பொய்கைநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் கட்சியில் இருந்து தாவியுள்ளனர்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு முடிந்த பிறகிலிருந்தே அந்தக் கட்சியில் இணைவதற்கு பல்வேறு கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நாகையில் இன்று மாற்று கட்சிகளை சேர்ந்தோர் தவெக-வில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. நாகை மாவட்ட ஒன்றியத்தின் செல்லூரை சேர்ந்த நா.த.க, தி.மு.க, அ.தி.மு.க-வை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரும் கொத்தாக விலகி விஜய்யின் கட்சியில் இணைந்துள்ளனர். முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தவெக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர்கள், வழக்கறிஞர்கள் உட்பட மகளிர் அணியும் கலந்துகொண்டனர்.

அதிகமான பெண்கள் கட்சியில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாயாரும் கட்சியில் இணைந்தார்.

தங்களை கட்சியில் ஏற்றுக்கொண்டாதல் அவர்கள் அனைவரும் விஜய்யை வாழ்த்தி கோஷமிட்டு வருகின்றனர்.

 

 

 

Comments (0)
Add Comment