விஜய் Organic மாஸ்-னா அப்போ வி.சி.க என்ன Inorganic மாஸ்-ஆ?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது தவெக கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியயையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியிருப்பது குறித்து பேசிய திருமாவளவன், “விஜயகாந்த் முதன்முதல்ல அரசியலுக்கு வந்தப்போவே இந்தக் கட்சியெல்லாம் காணாம போயிடும்னு சொன்னாங்க. ஆனா இன்னைக்கு விஜய் வந்தவுடனேயே இவ்வளவு ஹைப்” என்றுதான் தன் உரையையே துவங்கினார்.

வி.சி.க சார்பில் நடந்த மாநாட்டையும், தவெக சார்பில் நடந்த மாநாட்டையும் ஒப்பிட்டு அவர் பல விஷயங்களை பேசத்துவங்கினார்.

விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு வந்த கூட்டம் காசுக்காகவும், பிரியாணிக்காகவும் வந்த கூட்டம் என சாடினார். ஆனால் தன்னுடைய கட்சி மாநாட்டுக்கு வருபவர்கள் எல்லாம் தன்மீது கொண்ட அன்பின் பெயராலும், கொண்ட பற்றின் காரணமாகவும் வந்தவர்கள் என்று பெருமை பேசினார். எந்த சினிமா பின்னனியும் இல்லாமலே தனக்காக கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவார்கள் என்று அவர் தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசினார்.

இரண்டு லட்சம் பெண்கள், பற்பல குடும்பங்கள் இவை அனைத்தும் திருமாவளவன் என்னும் தன்னுடைய பெயரை நம்பி வந்தவர்கள் என யாராவது விவாதித்தார்களா? தன்னுடைய தலைமையில் ஆட்சி அமையும் என்று யாராவது விவாதித்தார்களா? தன்னுடைய தலைமையில் கூட்டணி அமையும் என்று யாராவது சொன்னார்களா? என்றெல்லாம் அவர் மக்களைப் பார்த்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திப்  பேசினார்.

யாரும் தன்னைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்; திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும்; அதை புரிந்து கொள்ளவே 10 ஆண்டுகள் தேவைப்படும். தன்னுடைய களம் முற்றிலும் வேறானது. எந்த புதிய கட்சியாலும், புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் தன்னுடைய விடுதலை சிறுத்தை  கட்சியை வெல்ல முடியாது என்று பேசி அவர் மக்களிடம் கைதட்டு பெற்றார்.

 

Comments (0)
Add Comment