அஜித் பட இசையமைப்பாளர் மாற்றம்; இவருக்கு பதில் இவரா!?

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஸ்பெயின் உள்ளிட்டஇடங்களில் நடந்து வருகிறது. இன்றைய தினம் பல்கேரியாவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் இன்றுடன் வெளிநாட்டு படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கபட்டிருந்தார். அவர் திடீரென படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சமீபத்தில் அவரது இசையில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றதும் காரணமாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு பதிலாக படத்தில் யார் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. விடாமுயற்சி படத்தை போலவே இந்தப் படத்திலும் அனிருத் இசையமைப்பாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் குட் பேட் அக்லி படத்தின் இசையமைப்பாளராக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அஜித்துடன் கிரீடம் படத்தில் ஜிவி பிரகாஷ் இணைந்து சிறப்பான எவர்கிரீன் பாடல்களை கொடுத்த நிலையில் தற்போது இந்தக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகளில் படக்குழுவினர் ஜிவி பிரகாஷுடன் ஈடுபட்டுள்ள நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட்அக்லி படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்துள்ளது. இன்றைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் பல்கேரியாவில் நடந்துள்ள நிலையில், இன்றுடன் வெளிநாட்டு படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்பவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் அஜித், தன்னுடைய ரேஸிங் பயிற்சிக்காக ஸ்பெயின் செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மும்பையில் சில தினங்கள் இந்தப் படத்தின்சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் இதையடுத்து ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கும் சில தினங்கள் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இந்தப் படங்கள் ஒரே நேரத்தில் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ள நிலையில், முதலில் குட் பேட்அக்லி படம்தான் வெளியாகும் என்பது ஏறக்குறைய உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

 

Comments (0)
Add Comment