மின்சாரம் பாய்ந்து 6ம் வகுப்பு மாணவன் பலி!

ஈரோட்டை அடுத்த பவானியில் குப்பிச்சிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் குப்பிச்சிபாளையம் அம்மா பாளையத்தில் ஈஸ்வரன் – செல்வி பெற்றோர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் யோகேஷ். ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால், மின்சார ஒயர் பள்ளியின் காம்பவுண்டுக்குள் அருந்து விழுந்து கிடந்தது. மறுநாள் காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா தேவி, மின்சார ஒயர் அறுந்து கிடக்கிறது பார்த்து, மாணவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு யோகேஷ் வரும்பொழுது அருகில் தண்ணீர் தேங்கி இருந்ததை கவனிக்காமல் கால் வைக்கவே அதில் மின்சாரம் பாய்ந்ததால் அவனை தூக்கி வீசியது. உடனே பள்ளியில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் முன்னதாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தினர் கவனக்குறைவால் தான் மாணவன் இறந்ததாக, ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவில் ஆர் டி ஓ கோபி, சிந்துஜா, பள்ளி கல்வித்துறை அதிகாரி பரமசிவம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களோடு இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து, போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Comments (0)
Add Comment