‘ஜி.டி.என்.’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி!

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் மாதவன், “’குரு’, ‘ராக்கெட்டரி’ என ஜி.டி. நாயுடு திரைப்படத்திற்கு முன்பே சில உண்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஜி.டி. நாயுடு திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றி. திரைப்படமாக உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் ஜி.டி. நாயுடு என்ற கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் அவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதை சரியாக செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மரியாதையும் எங்கள் 6எல்லோருக்கும் இருந்தது. இன்ஜினியரிங் நான் படிக்கவில்லை. ஆனால் அதன் மீது yer yetமிகப்பெரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்திற்கு துணை நின்றவர் அரவிந்த் சார். இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஜி.டி. நாயுடுவை பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. அதுவே மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவரைப் பற்றி மாணவர்களுக்கு ஒரு சாப்டர் இருக்க வேண்டும் என்ற போராட்டம் தான் படத்தில் அதிதியின் கதாபாத்திரம். இவ்வளவு பெரிய மேதை பற்றி ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்துவிட்டார். அவர் செய்த பல மாற்றங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். இந்த படத்தின் மீதும் என் மீதும் எந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்ததோ, அதைவிட அதிக அளவில் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி”

Comments (0)
Add Comment